×

உள்ளாட்சிகள் அதிகாரிகள் தகவல் சர்வதேச யோகா போட்டிக்கு கம்பம் பெப்பிள்ஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு

கம்பம், செப்.17:கம்பம் பெப்பிள்ஸ் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் நடக்கும் யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். பழனியில் உள்ள பழனி ஆண்டவர் பாலிடெக்னிக்கில் மாநில மற்றும் சர்வதேச யோகா போட்டி  நடைபெற்றது. இப்போட்டியில்  கம்பம் பெப்பிள்ஸ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி  மாணவர்  கருப்ப ஸ்ரேயன்  சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வானார். மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 8 வயது முதல் 11 வயது உள்ள பிரிவில்  சனபாத்திமா முதலிடமும், பூர்விக  இரண்டாம் இடமும், ரேஞ்சல் மற்றும் சபானாஸ்லி மூன்றாம் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் பாலமுருகன், முதல்வர் அல்போன்ஸ் மெர்சி, துணைமுதல்வர் ஜூலியட் மற்றும் யோகா மாஸ்டர் ராஜேந்திரன், மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவிராம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Pebbles School ,International Yoga Competition ,
× RELATED சென்னையில் சரக்கு லாரிக்கு போலீசார்...