×

மாவட்டத்தில் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக மனு அளிக்க செப்.20 கடைசி நாள்

சிவகங்கை, செப். 17: சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது, புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கை மனு அளிக்க செப்.20 கடைசி நாளாகும்.
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை சீர்படுத்தும் பணி 13.09.2019 முதல் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்குச்சாவடி சீரமைக்கும் பணியில் நகர்ப்புற வாக்குச்சாவடிகளுக்கு ஆயிரத்து 400 வாக்காளர்களும், கிராமப்புறத்தில் ஆயிரத்து 200 வாக்காளர்களும் அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 348 வாக்குச்சாவடிகள் உள்ளது.
தற்போது வாக்கினை உறுதி செய்யும் கருவி(ஏஏறியுவு) நடைமுறைக்கு வந்துள்ளதன் அடிப்படையில் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் ஆயிரத்து 500 வாக்காளர்கள் வரை அனுமதித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை ஏதேனும் மாற்றம் செய்ய மற்றும் புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் இருந்தால் அம்மனுக்களை 20.09.2019க்குள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ, தாசில்தாரிடம் அளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...