×

ராமநாதபுரத்தில் திருமண விழாவில் எஸ்பி வாழ்த்து

ராமநாதபுரம், செப்.17:  ராமநாதபுரம் தரணி விவசாய ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன நிர்வாக டிரஸ்ட் தரணி முருகேசன்-பாக்கியவதி ஆகியோரின் மகள் கங்காதரணிக்கும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திரன்-லலிதா ஆகியோரின் மகன் ஏனங்குடி ராஜேஷ் திருமணம் நேற்று ராமநாதபுரத்தில் மூத்த வக்கீல் நாகராஜன் தலைமையில் நடந்தது. விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள், இன்ஜினியர் செய்யது அப்துல் காதர், அகமது சாதிக், ஜுனைது முசம்மில், எஹியா ஹனிபா, வக்கீல் சுந்தர கிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட மனவளக்கலை மன்ற நிர்வாகிகள், உப்பூர் அனல் மின் நிலைய உயரதிகாரிகள், ஆசிரியர்கள், வக்கீல்கள், அரசியல் கட்சியினர் உள்பட ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வந்தவர்களை உப்பூர் அனல் மின் நிலைய உதவி இன்ஜினியர் கணேசன்-ஜானகி. முரளிதரன்-தரணி, என்டர்பிரைசஸ் நிர்வாகிகள் நித்தியதரன்,மோகனதரணி மற்றும் ராஜா ரஜினா ராஜிவ் சாலினி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தரணி முருகேசன் நன்றி கூறினார்.

Tags : greetings ,SP ,wedding ceremony ,Ramanathapuram ,
× RELATED ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாட...