×

சர்வதேச தரத்தில் அழகப்பா பல்கலைக்கழக பாடத்திட்டம் துணைவேந்தர் பெருமிதம்

காரைக்குடி, செப். 17: அழகப்பா பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் உள்ள பாடத்திட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாட வல்லுநர்களின் உதவியோடு சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது என துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறையின் சார்பில் நிலையான எரிசக்தி மற்றும் சென்சாருக்கான மேம்பட்ட பொருட்கள் என் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கின் தொடக்கவிழா நடந்தது. இயற்பியல் துறை தலைவர் ரவி வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமைவகித்து பேசுகையில், இப் பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகள் தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ பிளஸ் தகுதி பெற உதவியாக இருந்தது. இப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள பாடத்திட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாட வல்லுநர்களின் உதவியோடு சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டில் எச் இன்டெக்ஸ் குறியீடு எண் உயர்ந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகள் சமூகத்திற்கு மிகவும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், ஜப்பான் நாட்டின் தோஹேகு பல்கலைக்கழக பேராசிரியர் சடோஷி உதா, சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் பிரம்மநாயகம், அமெரிக்கா லமர் பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ் குடுரு, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் மோகன்ராவ், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் நடராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழக நானோ அறிவியல் துறை பேராசிரியர் அரவிந்தன், அறிவியல் துறை பேராசிரியர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் யுவக்குமார் நன்றி கூறினார்.

Tags : Vice Chancellor ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்