×

ரெட்டியார்சத்திரம் யூனியனில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

ஒட்டன்சத்திரம், செப். 17:  ரெட்டியார்சத்திரம் வட்டார பகுதிகளில் போஜான் அபியான் திட்டத்தின் 112 மையங்களில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயசந்திரிகா, முகமது மாலிக் (கிஊ) தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மெர்லின் கலந்து கொண்டார். முகாமில் ஒவ்வொரு அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எடையினை குறையாமல் பார்த்து கொள்வதுடன், சுகாதாரமாக பராமரித்திட தற்பொழுது போஜான் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை ஒவ்வொரு மையத்திலும் சிறப்புடன் செயல்படுத்தப்படும் வகையில் தினந்தோறும் குழந்தைகளின் வருகை பதிவினை கண்காணித்து, எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தேவையான இணை உணவுகளை வழங்க வேண்டும், தினந்தோறும் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும், மையம் முழுவதும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், மையத்தில் காலியாக உள்ள இடத்தில் காய்கறிகள் பயிரிட்டு அதை குழந்தைகளின் உணவிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : National Nutrition Awareness Camp ,Rettiarchatram Union ,
× RELATED கொரடாச்சேரியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்