×

காந்தி ஸ்டேடியத்தில் மாநில அளவிலான கயிறு தாண்டும் போட்டி

சேலம், செப். 17:சேலம் காந்தி ஸ்டேடியத்தில் மாநில அளவிலான கயிறு தாண்டும் விளையாட்டு போட்டி நடந்தது. சேலம் காந்தி ஸ்டேடியத்தில், தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு தாண்டும் விளையாட்டு போட்டி நடந்தது. தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்கத்தின் பொது செயலாளர் பிரசாத் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான கயிறு தாண்டுதல் விளையாட்டு போட்டியானது, புதியவர்கள் (11 வயதுக்கு கீழ்), சப் ஜூனியர் (11 வயது முதல் 14 வயது வரை), ஜூனியர் (14 வயது முதல் 17 வயது வரை) மற்றும் சீனியர் (17 வயதுக்கு மேல்) என 4 பிரிவின் கீழ், நடத்தப்பட்டது. இதில் தனிப்பட்ட முறையிலும், ஜோடியாகவும் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்று நிர்வாகிகள் ெதரிவித்தனர்.

Tags : Gandhi Stadium ,
× RELATED தென்னை மட்டை கிடைக்காமல் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் திண்டாட்டம்