×

மேற்கு மாவட்ட திமுக கூட்டம்

திருச்செங்கோடு, செப்.17: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு  சிஎச்பி காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில், வரும் 20ம் தேதி நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார். இதில்,   இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல்  சரிபார்ப்பு  மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி  அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,Western District ,DMK ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...