×

திருச்செங்கோட்டில் ஜேசி சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா

திருச்செங்கோடு, செப்.17: திருச்செங்கோடு டிவைன் ஜேசி சங்கம் சார்பில், விருது வழங்கும் விழா நெல்லுக்குத்தி மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்த விழாவில், கமல்பத்ரா விருது சண்முகநாதனுக்கும், சிறந்த தொழிலதிபர் விருது கார்த்திகேயனுக்கும், இளைஞர் விருது சரவணமுருகனுக்கும், பசுமை கரங்கள் விருது எஸ்பிகே பள்ளிகளின் தலைவர் பிரபுவிற்கும், சிறந்த மருத்துவர் விருது பிரசன்ன பாலாஜிக்கும், சிறந்த பள்ளிக்கான விருது எஸ்பிஎம் நர்சரி பள்ளிக்கும் வழங்கப்பட்டது. இதில், மண்டல தலைவர் கவின்குமார், உதவி தலைவர் சந்தியா பிரேம் ஆனந்த், வார விழா தலைவர் ஜெயமணிகண்டன், செயலாளர் தேவேந்திரபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Award Ceremony ,Thiruchengode ,Jassi Society ,
× RELATED திருச்செங்கோடு சித்தராம்பாளையம்...