தேன்கனிக்கோட்டை, செப்.17: கெலமங்கலத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ ஆலோசனை படி, கெலமங்கலத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமில் உறுப்பினர் படிவங்களை மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசனிடம், நிர்வாகிகள் வழங்கினர். இதில் பேரூர் பொறுப்பாளர் குமார், மாவட்ட விவசாய அணி ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், இளைஞரணி நிர்வாகிகள் தேவராஜ், மிதுன், தஸ்தகீர், வினோத், ஆருவப்பா, காந்தி, ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்