பாகலூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஓசூர், செப்.17: ஓசூர் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், பாகலூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளரும், கூட்டுறவு சங்கதலைவருமான ஜெயராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி, மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் மருத்துவர் சுனில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், ஓசூர் நகர செயலாளர் நாராயணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் நாராயணன், கெலமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் ஹரிஷ் ரெட்டி, பாகலூர் ஊராட்சி செயலாளர் ரவிக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், செல்வராசு, குபேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Anna ,birthday party ,Bagalur ,
× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்...