×

மாவட்டம் முழுவதும் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடக்கிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள். தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர 4 பேர் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி துறை, வருவாய் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது. எனவே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 2வது தடுப்பூசி நிலுவையில் இருந்தால்,  அவர்களும் இந்த முகாமில் 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முதல் தவணை போடாதவர்கள் அனைவரும், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தங்களது குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்த அழுத்தம், சக்கரை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியம். இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் சுமார் 60,000 தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. …

The post மாவட்டம் முழுவதும் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: கலெக்டர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Corona Special Vaccine ,Kanchipuram ,Kanchipuram District ,Arthi ,Corona vaccination camp ,Corona Special Vaccination Camp ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...