×

தர்மபுரியில் இன்று பெரியார் பிறந்த நாள் விழா

தர்மபுரி, செப்.17: தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட திமுக சார்பில், தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17ம்தேதி) காலை 9 மணிக்கு, அவரத திருவுருவச் சிலைக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. அது சமயம் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Periyar Birthday Celebration ,Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...