×

தளி அருகே சாமி சிலைகள் உடைப்பு

தேன்கனிகோட்டை, செப்.17: தளி அருகே கடப்பாரையால் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேன்கனிகோட்டை தாலுகா, தளி அருகே உள்ள உலிவீரணப்பள்ளி கிராமத்தில், பஸ் நிலையம் அருகிலுள்ள அரசமரத்தடியில் நாகர் சிலைகள் உள்ளது. இதை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், நாகர் சிலைகளை கடப்பாரையால் உடைத்து பெயர்த்துள்ளனர். அதேபோல் கோகுல ஆசிரமம் அருகில் இருந்த 8 நவகிரக சிலைகளையும் அடியோடு உடைத்து, பெயர்த்து விட்டு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை சிலைகள் உடைந்திருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, மத்திகிரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Sami ,Thali ,
× RELATED ஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்