×

ஒகேனக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில குழுக் கூட்டம்

தர்மபுரி, செப்.17: ஒகேனக்கல்லில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கருவூரான் வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் சாந்தமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பெரியசாமி, இடை கமிட்டி செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும். அனைத்து வகை மருத்துவமனைகளிலும் வலிப்பு நோய், மனநோய்களுக்கு தேவையான அளவு மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊத்தங்கரையில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேரின் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : State Council ,Meeting ,Disabled Persons Association of Okanakkal ,
× RELATED டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர்...