×

தமிழியக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, செப்.17: தர்மபுரியில், தமிழியக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் வடமாவட்ட  ஒருங்கிணைப்பாளராக முல்லை அரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பொறியாளர்  நரசிம்மன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர், வணங்காமுடி, கீரை பிரபாகரன், பொன்னுரங்கம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தமிழில்  பெயர் சூட்டுவதற்கு வசதியாக 4,500 தமிழ் பெயர்கள் அடங்கிய புத்தகம்  அமெரிக்காவில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக சென்னை,  திருவண்ணாமலையில் அறிமுக மாநாடு நடந்தது. அக்டோபர் 6ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி  மாவட்ட மாநாடு  நடைபெற உள்ளது. இதில் திரளாக பங்கேற்க உறுப்பினர்கள்  செயல்பட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதியமான் செய்திருந்தார்.

Tags : Meeting ,
× RELATED டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர்...