×

புதிய ரேஷன் கடை திறப்பு
புதிய ரேஷன் கடை திறப்பு
ஊட்டி, செப். 17:ஊட்டி அருகேயுள்ள கூக்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.   ஊட்டி அருகேயுள்ள கூக்கல் கிராமத்தில் கடந்த பல ஆண்டாக ரேஷன் கடை தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் நிரந்தர மற்றும் சொந்த கட்டிடம் கட்டித்தருமாறு ஊட்டி எம்எல்ஏ., கணேஷிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏ., நிதியில் இருந்து ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று கூக்கல் கிராமத்தில் நடந்தது.   விழாவில், ஊர் தலைவர் லிங்கன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் முன்னிலை வகித்தார். ஊட்டி எம்எல்ஏ., கணேஷ் கலந்துக் கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.Tags : ration shop ,
× RELATED ரேஷன் கடையை உடைத்து அரிசியைக் காலி செய்த ‘அரிக்கொம்பன்’ யானை