×

கேத்தி, பாலாடா பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

ஊட்டி, செப். 17:  ஊட்டி அருகேயுள்ள கேத்தி, பாலாடா பகுதியில் பொது மயான பூமி ேகாரி மனு அளிக்க வந்திருந்த பொதுமக்கள், கலெக்டர் தங்களை வந்து சந்திக்க வேண்டும் என கூறி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கேத்தி மற்றும் அதிகரட்டி ேபரூராட்சிகளுக்குட்பட்ட அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், இந்திரா நகர், சிவசெந்தூரன் நகர், சுப்பையாபாரதி காலனி, கரிப்பாலம், மாரியம்மன் கோயில் தெரு, பாலாடா டவுன் பகுதி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் மலை காய்கறி தோட்டங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இக்கிராமங்களில் யாரேனும் இறந்தால், அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாததால், கடும் பாதிப்படைந்து வருவதாகவும், எனவே பொதுவான மயான பூமி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளிப்பதற்காக பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலத்திற்கு வந்திருந்தனர்.

மேலும் அவர்கள் கலெக்டர் தங்களை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த ஜி1 போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதை தொடர்ந்து குன்னூர் தாசில்தார் தினேஷ், அங்கு வந்து கேத்தி, பாலாடா பகுதியில் பொது மயானம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கபட்டனர். தொடர்ந்து கலெக்டரிடம் சந்தித்து மனு அளித்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.



Tags : Kathy ,Collector ,Palata Area People ,Office Struggle ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...