×

ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

ஈரோடு, செப். 17:  சேலம் மாவட்டம் ஓமலூர் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர், சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, பஸ் மூலம் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
பின்னர், அங்கிருந்து டவுன் பஸ் ஏறி ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்து, 3வது பிளாட்பார்மில் அமர்ந்திருந்தார். சீருடையில் பள்ளி மாணவி இருப்பதை பார்த்த ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுமி அவரது அத்தையுடன் வந்திருப்பதாகவும், அவர் டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அவர் சொன்னது போல் யாரும் இல்லை.சைடு லைன் அமைப்பினர் தகவல் அறிந்து வந்து, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், 3வது பிளாட்பார்ம்மில் வந்து கொண்டிருந்த ரயில் முன்  பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அதிர்ஷ்டவசமாக ரயில் ஓட்டுநர் இன்ஜினை நிறுத்தினர். இருப்பினும், சிறுமியின் கை மணிக்கட்டு துண்டானது. அவரை போலீசார் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED தாம்பரத்தில் வடமாநில இளம் தம்பதி...