×

தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

ஈரோடு, செப். 17:  ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா என்ற மத்திய அரசின் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று முதல் துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு முதன்மை டெப்போ அதிகாரி தினேஷ் தலைமை தாங்கினார். ஸ்டேஷன் மேலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில், ரயில்வே காலனி மிக்ஸ்டு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை இந்தியா குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியும் ஏற்றனர்.இதைத்தொடர்ந்து, ஈரோடு ரயில்வே டிக்கெட் கவுன்டரில் துவங்கி, பிளாட்பார்ம்களில் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்று, மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : India ,
× RELATED பத்திரிகை நிறுவனங்களின் நெருக்கடி...