×

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

ஈரோடு, செப்.17:  திருவாரூர் மாவட்டம் மேலவாசல் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி அன்புக்கரசி (55). இவர், மன்னார்குடியில் இருந்து கோவை செல்வதற்காக செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். ரயில் நேற்று அதிகாலை ஈரோடு ஜங்ஷனுக்கு வந்து, பின்னர் கோவை நோக்கி புறப்பட்டது.
 அன்புக்கரசி ஜன்னல் ஓர சீட்டில் தூங்கி கொண்டிருந்தார். ரயில் புறப்பட்ட உடன் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர், அன்புக்கரசி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புக்கரசி, கூச்சல் போட்டார். ஆனால், அதற்குள் ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : St. ,train passenger ,
× RELATED தடை உத்தரவை மீறி நடைபயிற்சி அரசு பெண் ஊழியரிடம் 3 சவரன் செயின் பறிப்பு