×

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பிப்.12ம் தேதி கும்பாபிஷேகம் பாலாலய விழாவில் முடிவு

வலங்கைமான், செப். 17: வலங்கைமான் வரதராஜம் பேட்டைத்தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயிலுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் செய்திட நேற்று நடந்த பாலாலய விழாவில் முடிவு எடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டைத் தெருவில் சக்திஸ்தலம் என அழைக்கப்படும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் படைக்காவடி திருவிழா மிக சிறப்பானதாகும். இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் செய்திட முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து நேற்று மாகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தின் துவக்க நிகழ்வான பாலாய விழா உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பாலயவிழாவை முன்னிட்டு காலை விநாயகர் வழிபாடும், மகா சங்கல்பம், ஆச்சார்ய வர்ணம், வாஸ்துசாந்தி, முதல் பூர்வாங்கம் நடைபெற்றது.
அதனையடுத்து விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை, ஹேமம் நடைபெற்றது. பின்னர் பூர்ணஹீதி, தீபாராதனை , விமானபட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் வருகின்ற பிப்ரவரி மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் செய்திட தீர்மானிக்கப்பட்டது.

Tags : Valangaiman Mahamariamman Temple ,
× RELATED 03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்