×

நீடாமங்கலம் தெப்பக்குளத்தில் செடி, கொடிகள் அகற்றம் தன்னார்வ அமைப்புகளுக்கு மக்கள் பாராட்டு

நீடாமங்கலம்,செப்.17: நீடாமங்கலம் கிரீன் நீடா தன்னார்வ அமைப்பு சார்பில் 15 அமைப்புகள் தெப்பகுளம் செடிகளை அகற்றியதால் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுள் ஒருவர் பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பட்டது சந்தானராமசுவாமி கோயில். இந்த கோயில் எதிரில் தெப்பகுளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குளித்துவிட்டு சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற ஐதீகம் உண்டு. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன் இக்குளத்திற்கு வெண்ணாற்றிலிருந்து பழையநீடாமங்கலம் பாச வாய்க்கால் நீர் வந்து தெப்பகுளத்தில் பாய்க்காலாகவும், அருகில் வடிகாலாகவும் வரும். 12 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் மழைநீர் மட்டும் குளத்தில் கழிவு நீராக தேங்கி நோய் பரவும் நிலையில் இருந்தது.

குளத்தை சுற்றி காடுகளும்,குளத்தின் உள்புறம் நாணல் கோரை செடிகளும் மண்டி கிடந்தது. இதனையறிந்த கிரீன் நீடா தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் , பள்ளிகளின் மாணவர்கள் ,என்.எஸ்.எஸ் மாணவர்கள்,அரசு துறை,பல்வேறு ஊர்களிலிருந்து 15 அமைப்புகள் கலந்து கொண்டு தெப்பகுளத்தின் நான்குபுறங்களிலும் உள்ள மரங்களை அகற்றி,நாணல் போன்ற செடிகளை அகற்றியதால் பொது மக்கள் பாராட்டினர்.

Tags : Removal ,plants ,
× RELATED விலை வீழ்ச்சியால் செடியிலேயே அழுகும் கோஸ்: லட்சக்கணக்கில் நஷ்டம்