×

முத்துப்பேட்டை அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி சீரமைக்க கோரி 26ம் தேதி இந்திய கம்யூ. மறியல் போராட்டம் அறிவிப்பு

முத்துப்பேட்டை, செப்.17: முத்துப்பேட்டை அருகே குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றுவருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி 26ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர்பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சியை கடந்து பெத்தவேளாண்கோட்டகம் வரையிலான சாலை என்பது இப்பகுதி மக்களுக்கு ஒரு முக்கிய சாலையாகும். இவ்வழியாக இப்பகுதிகளுக்கு மட்டுமின்றி தஞ்சை மாவட்டம், மதுக்கூர்;, சிரமேல்குடி, தஞ்சை போன்ற பகுதிக்கு செல்லும் மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு சாலையாகும். இதில் கோவிலூர்பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சி வரை உள்ள சுமார்3.2 கிமீ சாலை தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் நான்குமுறை அரசு பேருந்தும், நான்கு முறை தனியார்மினி பேருந்தும் சென்று வருகிறது. இதனால் இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் சுமார்7வருடமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வில்லை.. இந்நிலையில் கடந்த 3மாதங்களுக்கு முன்பு இந்த சாலையால் அதிருப்திடைந்த இப்பகுதி மக்கள் சுமார்100க்கும் மேற்பட்டோர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்முருகையன் தலைமையில் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுநாள்வரை இந்த சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையிமில்லை.. தற்பொழுது சில தினங்களாக பெய்து வரும் மழைக்கு மழைநீர்சாலையில் நெடுவேங்கும் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். சாலையை சீரமைக்காததால் வரும் 26ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணியின் ஒன்றிய துணைச்செயலாளர்சிவசந்திரன் கூறுகையில், இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்திவிட்டோம் பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார்தெரிவித்துள்ளோம் ஆனால் அதிகாரிகள் சொன்ன வாக்குறுதிபடி இந்த சாலையை சீரமைக்க முன்வரவில்லை. இதனை கண்டித்து வரும் 26ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துப்பேட்டை கிழக்கு கடற்க்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்த முடிவு செய்து அறிவித்துள்ளோம் என்றார்.

Tags : Indian Communist Party of India ,motorists ,MCA ,Muthupet ,pit road ,Pickup Struggle Announcement ,
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!