×

ஆலத்தூர் பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

இலுப்பூர், செப்.17: இலுப்பூர் அருகே ஆலத்தூரில் உள்ள பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற பிடாரியம்ன் கோயில் உள்ளது. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தார்கள் முடிவெடுத்து, அதன் திருப்பணி பணிகள் முடிவடைந்த நிலையில் யாக சாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் துவங்கியது.


யாக சாலையில் கடம் ஸ்தாபிதம் செய்து வாஸ்து சாந்தி, கணபதி பூஜை, கோபூஜை, லட்சுமிபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்த புனிதநீர் மங்கள இசையுடன் கோயிலை வலம் வந்தது. பின்னர் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பிடாரியம்மளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா தீப ஆராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Alathoor Pitariyamman Temple ,shrine ,
× RELATED கேரளாவில் பெண் வேடமிட்டு ஆண்கள்...