×

புதுகை அடுத்த கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்கில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, செப்.17: புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். தாளாளர்கள் குமாரசாமி, கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். புதுக்கோட்டை மாவட்ட கட்டுமான பொறியாளர்களின் முன்னாள் சங்க தலைவர் நல்லத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், அனைத்து தொழில் நுட்பத்திற்கும் அடிப்படை பட்டய கல்விதான் தொழில் நுட்பத்தில் சாதனை புரிந்தவர்கள் பலரும் தனது அடிப்படை அறிவை விரிவாக்கி பல சாதனைகள் படைத்திட அவர்களுக்கு பட்டயக் கல்விதான் ஆதாரமாக இருந்தது. எனவே, நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற பாடப்பிரிவில் முதன்மையானவராக ஆக்கிக்கொள்ளுங்கள்.துறை சார்ந்த பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், செய்முறை அறிவை அதிகம் வளர்த்து கொள்ளுங்கள் என்றார்.முன்னதாக கல்லூரி முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார். கல்லூரி டீன் சங்கரன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வாழ்த்தி பேசினர். முடிவில் அமைப்பியல் துறைத் தலைவர் அனுராதா நன்றி கூறினார்.

Tags : Engineer's Day Celebration ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...