மணமேல்குடியில் பனை விதை நடவு பணி துவக்கம்

மணமேல்குடி, செப்.17: மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமை வகித்து கோடியக்கரை கடற்கரை பகுதியில் பனை விதை நடவு செய்து தொடங்கி வைத்தார் .மேலும் மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடற்கரை பகுதியில் சுமார் 2000 பனை விதைகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சுரேஷ் ,காளிமுத்து உட்பட மக்கள் பாதை இயக்க நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>