இம்மணம்பட்டி சோனகருப்பர் கோயில் புரவி எடுப்பு திருவிழா

புதுக்கோட்டை,செப். 17: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள இம்மணம்பட்டி சோன கருப்பர் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஊர் பொது மக்கள் விரதமிருந்து கைக்குறிச்சி இலிருந்து தாரை தப்பட்டை வாணவேடிக்கையுடன் பெண்கள் குலவையிட்டு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் செவ்வந்தி தோப்பு அருகே உள்ள சோனை கருப்பன் அய்யனார் முனீஸ்வரர் கருப்பாயி சின்ன கருப்பு பெரிய கருப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு படையல் செய்து கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Immanampatti Sonakarupar Temple Temple Hosting Festival ,
× RELATED கீரனூரை சுற்றியுள்ள...