×

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,செப்.17: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப் பிக்க அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சாந்தா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொ ள்வதற்காக தமிழக அர சால் நபர் ஒருவருக்கு ரூ20 ஆயிரம் நிதி உதவி வழங் கும் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க லாம். இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்க ளை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட் சகோதரிகள் புனிதப் பய ணம் மேற்கொள்ள அனு மதித்தும் அரசால் ஆணை யிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆ கிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான்நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவமத தொட ர்புடைய பிற புனித தலங் களையும் உள்ளடக்கியது. இந்தப்புனித பயணம் செப் டம்பர் 2019முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தே சிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாட்கள் வரை மட் டுமே.

இதற்கான விண்ணப்பப்ப டிவம் பெரம்பலூர் கலெக் டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நல அலுவல கங்களிலிருந்து கட்டண மின்றி பெறலாம். தவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பப் படிவத் தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்ட த்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இதற்கா ன காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது. புனித பயணம்செல்ல விரு ப்பமுள்ள பயனாளிகள் பூர் த்தி செய்யப்பட்ட விண்ண ப்பம் மற்றும் உரிய இணை ப்புகளுடன் அஞ்சல் உறை யில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயண த்திற்கான நிதியுதவி கோ ரும் விண்ணப்பம் 2019-20” என்று குறிப்பிட்டு ஆணை யர், சிறுபான்மையினர் நல த்துறை, கலசமஹால் பார ம்பரிய கட்டடம், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600 005 என்றமுகவரிக்கு வரும் 30ம்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வே ண்டும். எனவே பெரம்பலூ ர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தமிழக அர சின் இச்சிறப்புத் திட்டத் தில் பங்குபெற்று பயன்பெ றலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Christians ,Jerusalem ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்