×

இலவச திறன் வளர்ப்பு பயிற்சி: பயன்பெற அழைப்பு

பெரம்பலூர்,செப்.17: கௌ ஷல் சே குஷால்தா திட்டத் தின் கீழ் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி பெற பெர ம்பலூர் மாவட்டத்தை சேர்ந் தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் தெரிவித்திருப்ப தாவது : தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழ கத்தின் நிதி உதவியுடன் கௌஷல் சே குஷால்தா திட்டத்தின் கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில் லாத சிறுபான்மையின வகுப்பை சார்ந்த இளைஞ ர்களுக்கு காஞ்சிபுரம் மாவ ட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் மூல ம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்கு பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ் அன்ட் கார் மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாட் கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் வீதம் மொத்தம் 40 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப் பை சேர்ந்த இஸ்லாமியர் கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயி ன் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயி ற்சியாளரின் குடும்ப ஆண் டு வருமானம் ரூ5 லட்சத்தி ற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக வும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1534 பயிற் சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.

இதற்கான நேர்காணல் காஞ்சிபுரம் மாவட்டம், வா லாஜாபாத், எண் 64 சி, சாலைத் தெரு, புதேரி என்ற முகவரியில் செயல் படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் வரும் 20ம்தேதி அன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேற் படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமான ச்சான்றிதழ், ஆதார் அட்டை கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ள லாம். இப்பயிற்சி திட்டத் தில் சிறுபான்மையின இ ளைஞர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.மேலும்இது தொ டர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலர், மத்திய காலணி பயிற்சி நிலையத்தை அணுகி விவரங்களை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஊராட்சி தலைவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு திறன் பயிற்சி முகாம்