×

பெரம்பலூரில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 263 மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர்,செப்.17: பெரம் பலூர் கலெக்டர் அலுவல கத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 263பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலு வலகத்தில் கலெக்டர் சாந் தா தலைமையில் பொது மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொ கை,பட்டா மாற்றம், தொழி ல் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டும னைப்பட்டா உட்பட பல் வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி 263 பேர் தங்க ளது கோரிக்கை மனுக்க ளை கலெக்டர் சாந்தாவி டம் அளித்தனர்.அம்மனுக்களை சம்மந்தப் பட்ட அலுவலர்களிடம் அளி த்து மனுக்கள் குறித்த விவ ரங்களை கேட்டறிந்து குறி த்த காலத்திற்குள் மனுக்க ளின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரரு க்கு உரிய பதிலை அளிக்கு மாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொ டுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்கு ரிய நடவடிக்கைகளை உட னடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக் கும் அரசின் நலத்திட்டங் கள் விரைவாக சென்றடை யுமாறு பணியாற்றிட வே ண் டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக் டர் சாந்தா உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ ராஜே ந்திரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) சக்தி வேல், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்