×

ஆர்வலர் குழுவின் நிர்வாகிகளை மாற்ற கோரி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

பெரம்பலூர்,செப்.17: பெரம் பலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தி ற்குள் விவசாய ஆர்வலர் குழுவின் நிர்வாகிகளை மாற்றக்கோரி திருப்பெயர் விவசாயிகள் தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. வேளாண் துறை சார்பில் கூட்டு பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது, இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தலைவர், செயலாளர், பொருளா ளர் உட்பட 17உறுப்பினர் கள் என 20 பேர் கொண்ட விவசாய ஆர்வலர்கள் குழு அமைக்கப்படுகிறது. பின் னர் விவசாய ஆர்வலர் குழுமூலம் வங்கியில் கண க்கு தொடங்கி அதில் குழு உறுப்பினர் சந்தா தொகை யை டெப்பாசிட் செய்யப்ப டும்.இந்த நிதியைக் கொண்டு சுழற்சி முறையில் விவசா யிகளுக்குத் தேவையான இடுப்பொருட்கள் வாங்கி கொள்வார்கள்.

இதில் சிற ந்த விவசாய ஆர்வலர்கள் குழுவிற்கு வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. அந்த வேளாண் இயந்திரங் களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு விவ சாயிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்வார்கள். இத்திட்டத்தின்கீழ் மேல ப்புலியூர் ஊராட்சிக்கு உட்ப ட்ட திருப்பெயர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாய ஆர்வலர்கள் குழு நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அந்த நிர்வாகிகளை மாற்றவே ண்டும் எனக் கோரி அக்கி ராம விவசாயிகள் சதீஷ் (29), அசோக்குமார்(39), இளங்கோவன்(33), பெரிய சாமி(52) உள்ளிட்ட சிலர் நேற்று பெரம்பலூர் மாவ ட்ட வேளாண் இணைஇயக் குநர் அலுவலகத்திற்குள் அவரது அறையின் முன் பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வேளாண் இணை இயக்குநர் கணே சன், உதவி வேளாண் இய க்குநர் கீதா, வேளாண்மை அலுவலர் தனபால் ஆகி யோர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் சமரசப் பேச் சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாய ஆர்வ லர்கள் குழுவின் ஆலோச னைக் கூட்டம்நடத்தி அதில் தீர்மானம் நிறைவேற்றி வேறு நிர்வாகிகளை நிய மித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் வேளாண்மைதுறை இணை இயக்குநர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Farmers Darna ,office ,Joint Director of Agriculture ,activist group ,executives ,
× RELATED 10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா...