×

சாலை பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்

பெரம்பலூர்,செப்.17:தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற் குழு கூட்டம் நேற்று (14ம் தேதி) மாலை 6 மணிக்கு பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன் றிய அலுவலக வளாகத் தில் நடைபெற்றது. கூட் டத்திற்கு தமிழ்நாடு நெடு ஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர்மாவட்டத்தலை வர் சுப்ரமணி தலைமை வகித்தார்.பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சுப்ர மணி விளக்கவுரையாற்றி னார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் இன்று (17ம்தேதி) சாலைப்பணியாளர் சங்க த்தின் 19ம்ஆண்டு அமை ப்பு தினத்தையொட்டி காலை 8மணி முதல்10 மணிக்குள் உட்கோட்ட அலுவலகங்கள் முன்பு சங் கக் கொடி ஏற்றுவது.10.30 மணிக்கு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றி அலுவல கம், தீயணைப்புத்துறை அலுவலகம், வேலை வாய் ப்புத் துறை அலுவலகம் ஆகிய இடங்களில் முள் செடி தூய்மைப்பணி செய் வது எனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முடிவில் கருணாநிதி நன்றி கூறி னார்.

Tags : Road Workers Union Executive Committee Meeting ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...