×

30 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வேளாண் கூட்டுறவு வங்கியில் ஊழலுக்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்

நாகை, செப்.17: திருமருகல் அருகே சேஷமூலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கு துணை போகும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை கலெக்டர் அலுவலக சுற்றுசுவர் மற்றும் புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் திருமருகல் ஒன்றியம் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இதில் திருமருகல் அருகே சேஷமூலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017-18ம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட நெல் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையில் ரூ.2.17கோடி ஊழல் நடந்துள்ளது.

எனவே ஊழல் செய்த சேஷமூலை சங்க நிர்வாகத்தை கலைக்க வேண்டும். ஊழலுக்கு துணை நின்ற சங்க தலைவர், செயலாளர் உட்பட அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் விசாரணை செய்யாமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் உள்ளது. இவ்வாறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர் நாகை பகுதி முழுவதும் ஒட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : district administration ,
× RELATED புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7...