×

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் அவலம் மதுபோதையில் மினி பேருந்து இயக்கிய டிரைவர் கைது

கும்பகோணம், செப். 17: கும்பகோணம் அருகே மதுபோதையில் மினி பேருந்து இயக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் இருந்து தாராசுரத்தை நோக்கி நேற்று காலை மினி பேருந்து சென்றது. இப்பேருந்தை திருப்புறம்பியத்தை சேர்ந்த கோபி (28) என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் வந்தபோது சாலையின் நடுவில் இருந்த பேரிகார்டு மேல் மோதியது. பின்னர் பேரிகார்டிலிருந்து மினி பேருந்தை வேகமாக திருப்பியபோது சாலையில் பைக்கில் சென்ற கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மினி பேருந்து தாறுமாறாக ஓடுவதை பார்த்த பொதுமக்கள், மினி பேருந்தை மறித்து பிடித்து டிரைவர் கோபியை விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் டிரைவர் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து மினி பேருந்து டிரைவரான திருப்புறம்பியம் உத்திரை மெயின் ரோட்டை சேர்ந்த புண்ணியகோபு மகன் கோபி (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : bus driver ,
× RELATED மதுராந்தகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழப்பு