×

காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு ஆற்றங்கரையில் ஆண் சடலம்

கும்பகோணம், செப்.17: கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரம் வீரசோழன் ஆற்றின் கரையோரம் உடலில் ஆடை ஏதும் இல்லாமல் இறந்த உடல் கிடந்தது. இதுகுறித்து விஏஓவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். கோவிந்தபுரம் விஏஓ ராஜ்மோகன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டு திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவருக்கு சுமார் 42 வயது இருக்கலாம் எனவும் அவரது உடலில் துர்நாற்றம் ஏதும் வீசாததால் இறந்து 2 நாட்களுக்குள் தான் இருக்குமென கூறப்படுகிறது. மேலும் ஆடைகள் ஏதும் இல்லாததால் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : river bank ,Cauvery Farmers' Association ,
× RELATED சிங்கம்பட்டி ஜமீன் உடல் தகனம்