×

சாக்கோட்டை செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

கும்பகோணம், செப். 17: உலக ஓசோன் தினத்தையொட்டி கும்பகோணம் சாக்கோட்டை செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. மாதா கல்வி குழும இயக்குனர் மற்றும் தாளாளர் மரியசெல்வம் தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார். மாதா காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை பிச்சை ஜோதிமணி மரியசெல்வம் மற்றும் செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் லதா சுரேஷ் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, வாகனங்களில் இருந்து வரும் புகை தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை மற்றும் கழிவுநீர் குளிர்பதன பெட்டியில் இருந்து வரும சிஎப்சி வாய்வு போன்ற காரணங்களால் ஓசோன் படலம் பாதிப்படைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒளி மற்றும் ஒலி அமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு அதன் விவரத்தை முதுகலை உயிரியல் ஆசிரியர் செந்தில் விளக்கினார். விழாவில் மாணவர்களுக்கு 2,500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags : St. Antony ,Matriculation School ,
× RELATED மத்திய அரசின் விதிவிலக்கை மீறி...