×

பள்ளபட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை 30 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

அரவக்குறிச்சி, செப். 17: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர். 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அரவக்குறிச்சி பள்ளபட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து .பள்ளபட்டியில் பஸ் நிலையம், கடைவீதி, பெரிய ஓடைத் தெரு, திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல கடைகளை ஆய்வு செய்தனர். இதில் 30 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் என தெரிகின்றது. இதனையடுத்து கடைக்காரர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கக் கூடாது.  மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, வட்ட அலுவர்கள் சதீஷ்வரன், பாஸ்கர், மதுரை வீரன், சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags : Food safety department ,school stores ,
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...