×

கரூர் சின்னதாராபுரம் மெயின் ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டியதோடு சாலைப்பணி பாதியில் நிறுத்தம்

கரூர், செப். 17: கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மெயின் ரோட்டில் தார்ச்சாலை அமைப்பதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பிரதான மெயின்ரோடு உள்ளது. இந்த சாலையின் இடையே உள்ள ஒரு தெருவில் தார்ச்சாலை அமைக்கும் வகையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் தார்ச்சாலை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதி மக்கள் நலன் கருதி தார்ச்சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Karur Chinnadapuram Main Road ,
× RELATED சோழவந்தானில் அவலம்: ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் விபத்து