×

மானூரில் வேதநாயகம் அணியினர் தேர்தல் ஆலோசனை கூட்டம்

மானூர், செப். 17:  திருநெல்வேலி திருமண்டல பேராயர் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம், மானூரில் ‘லே’ செயலாளர் வேதநாயகம் தலைமையில் நடந்தது. திருநெல்வேலி திருமண்டலத்தில் மத்திய சபை மன்றம், தெற்கு சபை மன்றம், மேற்கு சபை மன்றம், வடக்கு சபை மன்றம், வடமேற்கு சபை மன்றம், தென்மேற்கு சபை மன்றம் என 6 சபை மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருமண்டல பேராயர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து சபை மன்றங்கள் அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மானூரில் வடமேற்கு சபைமன்ற அளவில் ‘லே’ செயலாளர் வேதநாயகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

 உபதலைவர் பில்லி ஜெபித்து கூட்டத்தை துவக்கிவைத்தார். குருத்துவச் செயலாளர் பீட்டர் தேவதாஸ், பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ் சிறப்புரையாற்றினர். டயோசீசன் டெப்போ கண்காணிப்பாளர் மணக்காடு ஜீவகுமார், காது கேளாதோர் பள்ளித் தாளாளர் அருண்சாமுவேல், சாராள் தக்கர் கல்லூரித் தாளாளர் சாம்சன் பால்ராஜ், நல்லூர் கல்லூரித் தாளாளர் எஸ்பிடி வக்கீல் நெல்சன், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளித் தாளாளர் காபிரியேல் தேவா, வக்கீல் காமராஜ், இயக்குநர்கள் டேவிட்அன்பு பிரபாகர், விஜயசிங், ஆரோன் ஜெபத்துரை, அகஸ்டன், மத்திய சபை மன்றம் முத்துராஜ் பேசினர்.கூட்டத்தில் வடமேற்கு சபைமன்ற குருமார்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சபைத் தலைவர்கள், பெரியோர்கள் என திரளானோர் பங்கேற்றனர். இதில் குருத்துவச் செயலாளர் பீட்டர் தேவதாஸ் உள்ளிட்ட 4 பேரை வேதநாயகம் அணி சார்பில் பேராயர் தேர்தலுக்கு முன்னிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.ஏற்பாடுகளை வடமேற்கு சபை மன்ற பெருமன்ற உறுப்பினர்களான பொன்னு, பீட்டர்ஜாண், ரெனால்டு சந்தோஸ் ராஜ், பிரிஸ்கில்லாள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Vedanayagam ,team election ,meeting ,Manur ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...