அணைக்கரையில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம்

திசையன்விளை, செப். 17:  திசையன்விளை கட்டுமான பொறியாளர்கள்  மற்றும் பில்டர்ஸ் சங்கம் சார்பில், அணைக்கரை மெர்சி ஹோமில்  பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார்.பில்டர்ஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் பாலராஜன், லிங்கராஜ் முன்னிலை  வகித்தனர். செயலாளர் மணிகண்டபிரபு வரவேற்றார். சங்க உறுப்பினர்கள் சுகராஜா,  ஆபிரகாம், சுப்பிரமணியன், நவீன், சுந்தர், ராபின், சுதன் தினேஷ் கலந்து  கொண்டனர். பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார். விழாவில், ஹோமில் உள்ள குழந்தைகளுக்கு இரவு உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.


Tags : Engineers Day Celebration ,
× RELATED கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு ஆணை வழங்கல்