வி.கே.புத்தில் பைக் மோதி முதியவர் பலி

வி.கே.புரம், செப். 17:  வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட முதலியார்பட்டி கோயில் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து (67). இவர், இங்குள்ள மெயின்ரோட்டில் சைக்கிள் பஞ்சர்               பார்க்கும் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு         செல்லும்போது எதிரே பைக்கில் வந்த இதே ஊரை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் வேல்கனி மோதினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

Tags :
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது