×

குளத்தூர் அருகே பைக் மோதி படுகாயமடைந்த மீனவர் சாவு

குளத்தூர், செப். 17: குளத்தூர் அருகே பைக் மோதி படுகாயமடைந்த மீனவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குளத்தூர் அடுத்த  தருவைகுளம் நார்பட் நகரை சேர்ந்தவர் முருகன் என்ற அந்தோணி (55).  மீன்பிடித்தொழிலாளியான இவர் கடந்த 11ம்தேதி தருவைகுளம் சமத்துவபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது   எதிரே தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த பூபால் மகன்  மணிமாறன் (32) என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த பைக்  எதிர்பாராதவிதமாக முருகன் (எ) அந்தோணி மீது  மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் என்ற அந்தோணியை தூத்துக்குடி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தருவைகுளம்  போலீசார்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Fisherman ,bike crashes ,Klathoor ,
× RELATED ராமேஸ்வரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை