×

நெல்லையில் ஆலோசனை கூட்டம் கடைகளை இழந்து தவிப்போருக்கு மாற்று இடம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்

நெல்லை, செப். 15: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சந்திப்பு பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணி துவங்கியுள்ளதால் கடைகளை இழந்து தவிப்போருக்கு உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் என நெல்லை மாநகர அனைத்து உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  நெல்லை மாநகர அனைத்து உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் சங்கத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாலைராஜா தலைமை வகித்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாலமோன், செயலாளர் அகமதுஷா, பொருளாளர் திருமலைமுருகன், கவுரவ ஆலோசகர்கள் சத்தியா நாராயணன், ஹேமா ஸ்டீபன் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்துவதற்கு முன்பாக வியாபாரிகளுக்கு உரிய மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்கனவே கடை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உரிய இடத்தில் கடை ஒதுக்கீடு செய்ய எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணி துவங்கி நடந்து வருவதால் கடைகளை இழந்து தவிக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடங்கள் வழங்க வேண்டும். பணிகள் முடிந்த பிறகே உரிய வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் மாநகராட்சி நிர்வாகம் உரிய மாற்று இடங்களை ஒரே இடத்தில் வழங்க வேண்டும்் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  இதில் பாளை காந்தி மார்க்கெட் சங்கச் செயலாளர் பெரியபெருமாள், தொழில் வர்த்தக சங்க குணசேகரன், முகமது இப்ராகிம், மாரிசெல்வம், அருள்இளங்கோ, புதிய பஸ் நிலைய சங்கத் தலைவர் மரியசார்லஸ் மற்றும் சந்திப்பு பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், பாளை மகாராஜநகர், மனகாவலம் பிள்ளை நகர், டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் உள்ளிட்ட மாநகரத்திலுள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.

Tags : Advice meeting ,shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி