×

நெல்லையில் பொதுக்குழு கூட்டம் சம வேலைக்கு சம ஊதியம் எம்ஆர்பி நர்சுகள் சங்கம் வலியுறுத்தல்

நெல்லை, செப். 15: தமிழ்நாடு எம்ஆர்பி நர்சுகள் மேம்பாட்டு சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. நெல்லை சந்திப்பில் உள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தேவி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் எம்ஆர்பி நர்சுகளுக்கும் பிற நர்சுகளுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து நர்சுகளுக்கும் ஒரே சீருடை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோரிக்கைகளை அறவழியில் வலியுறுத்தி வரும் எம்ஆர்பி நர்சுகள் சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   பொதுக்குழு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் துரை சிங், மாநில இணைச்செயலாளர் குமாரவேல், மாநில துணைத்தலைவர் கற்பகம், நெல்லை வட்டார கிளைச் செயலாளர் வேல்ராஜ், பொது சுகாதாரத் துறை ஊழியர் சங்கத்தின் கங்காதரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

Tags : MRP Nurses Association ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு