×

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

நெல்லை, செப். 15:  பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.நெல்லை மாவட்ட மழலையர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி நலச்சங்கம் சார்பில்  பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியி ஆசிரியர் தின விழா நடந்தது. தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ராபின்சன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அதிமுக மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த், 10 ஆண்டுகளுக்கு மேல் நர்சரி பள்ளிகளில் தொடர்ந்து பணியாற்றிய 140 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

இதேபோல் 25 ஆண்டுகள் பணியாற்றிய  தாளாளர் பாளை தியாகராஜநகர் சுவாமி நர்சரி, பிரைமரி பள்ளி தாளாளர் சேது சின்னச்சாமி உள்ளிட்ட 39 தாளாளர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம்  பெயரில் விருகள் வழங்கப்பட்டன. விழாவில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சந்திரமதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags : Award ceremony ,teachers ,
× RELATED 5 லட்சம் ஏழை பீடித்தொழிலாளர்கள்