×

தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி, செப்.15:தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு மூலம் 1794 வழக்குகளில் ரூ.5.83 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்ற அமர்வை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடியில் 1,562 வழக்குகளும், கோவில்பட்டி நீதிமன்றத்தில் 1,015 வழக்குகளும், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் 464 வழக்குகளும், ஸ்ரீ வைகுண்டம் நீதிமன்றத்தில் 262 வழக்குகளும், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் 209 வழக்குகளும், விளாத்திகுளம் நீதிமன்றத்தில் 193 வழக்குகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 705 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 1,794 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.5 கோடியே 83 லட்சத்து 18 ஆயிரத்து 445 வரை தீர்வு காணப்பட்டு உள்ளது. முடிக்கப்பட்ட வழக்குகளுக்கான ஆணை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் குமார் சரவணன், சிவஞானம், ஹேமா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : National People's Court ,
× RELATED ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி