×

விவசாயிகள் கோரிக்கை வலங்கைமான் தாலுகாவில் நீர்நிலை புறம்போக்கில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள்

வலங்கைமான், செப். 15: வலங்கைமான் தாலுகாவிற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மாற்று இடம் தரும் விதமாக டிஆர்ஓ நேரில் ஆய்வு மேற்கொண்டார். வலங்கைமான் தாலுக்காவிற்கு உட்பட்ட வடக்குபட்டம், தென்குவளவேலி உள்ளிட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் பல ஆண்டுகளாக நீர் நிலை புறம் போக்குகளான வாய்க்கால் புறம் போக்கு மற்றும் ஆற்று புறம் போக்குகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக அரசின் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்போது அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இருப்பினும் வீட்டு மனை பட்டா இல்லாததால் மத்திய மாநில அரசுகளால் பல்வேறு கால கட்டங்களில் செயல்படுத்தப்படும் வீடு வழங்கும் திட்டத்தின் பயன் வாய்ப்பில்லாமல் போனது.

இந்நிலையில் தமிழக அரசு இக்குறைகளை களையும் பொருட்டு நீர்நிலைகளில் வசிப்போருக்கு மாற்று இடம் தர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இவர்களுக்கு உரிய மாற்று இடம் தரவும், மேலும் களம் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு வகைபாடு மாற்றம் செய்து அதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கீழவிடையல், மேலவிடையல், ஆதிச்சமங்கலம், அட்டமங்கலம் மற்றும் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகளில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்), தாசில்தார் இஞ்ஞாசிராஜ், வருவாய் ஆய்வாளர் சுபா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Tags : Walangaiman Taluk ,
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...