×

டிஆர்ஓ ஆய்வு திருவாரூரில் வேளாண் கல்லூரி துவங்க வேண்டும்

திருவாரூர், செப்.15: திருவாரூரில் வேளாண் கல்லூரி துவங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு திருவாரூரில் நேற்று மாவட்ட தலைவர் (பொ) ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் அன்பரசு,மாநில செயலாளர்கள் சவுந்தர்ராஜன், பன்னீர் செல்வம் ,மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம் ,மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை கைவிட வேண்டும்.

21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான அரசாணை எண் 56 யை ரத்து செய்ய வேண்டும் . இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிஆதிசேஷையா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினை கலைத்திட வேண்டும். அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் ,நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட வேண்டும் ,திருவாரூரில் அரசுமேல்நிலைப்பள்ளி ஒன்றினை துவங்கிட வேண்டும், கருவூலம் உட்பட பிற துறைகளை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவினை கைவிடவேண்டும், விவசாய மாவட்டமான திருவாரூரில் அரசு வேளாண் கல்லூரி ஒன்றினை துவங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Thiruvarur ,Agricultural College ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்