×

பேராவூரணியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்

பேராவூரணி, செப். 15: பேராவூரணி வேதாந்தம் திடலில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு முத்துமாணிக்கம், தெற்கு ரவிச்சந்திரன், நகர செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப.சேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பேராவூரணி அரசு, சேதுபாவாசத்திரம் ராமமூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் சாத்தையன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK Youth Membership Camp ,Peravurani ,
× RELATED கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே...