தஞ்சையில் அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி

தஞ்சை, செப். 15: தஞ்சையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 290 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட பிரிவு சார்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில் 13 வயது மற்றும் 17 வயது என இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவிகள் 80 பேரும், மாணவர்கள் 210 பேரும் என மொத்தம் 290 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி துவக்கி வைத்தார். ஹாக்கி பயிற்றுநர் அன்பழகன் வரவேற்றார்.

போட்டியில் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் ரகுராம் முதலிடத்தையும், வரகுணன் 2ம் இடத்தையும், பாலாஜி 3ம் இடத்தையும் பிடித்தனர். 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் தேவா முதலிடத்தையும், அஸ்வின் 2ம் இடத்தையும், விஷ்ணு 3ம் இடத்தையும் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் ஆல்வின் விக்டர் முதலிடத்தையும், ஹரி 2ம் இடத்தையும், வினுசூரியா 3ம் இடத்தையும் பிடித்தனர். 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவி மதுமிதா முதலிடத்தையும், பிரணவ்பிரியா 2ம் இடத்தையும், யாழினி 3ம் இடத்தையும் பிடித்தனர்.

15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ரித்திகா கேத்ரின் முதலிடத்தையும், சினேகா 2ம் இடத்தையும், லைஷாலட்சுமி 3ம் இடத்தையும் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி அட்சயா முதலிடத்தையும், தீபிகா 2ம் இடத்தையும், ரஹ்முனிஷாபேகம் 3ம் இடத்தையும் பிடித்தனர். முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 4 முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வாழ்த்தி பேசினார். கையுந்து பந்து பயிற்றுநர் மகேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags : Anna Birthday Bicycle Competition ,
× RELATED அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி